பொன்னாளி அம்மன் கோவிலில் சத்தாபரணம்

பொன்னாளி அம்மன் கோவிலில் சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-07-18 20:18 GMT

தலைவாசல்:-

தலைவாசல் அருகே பொன்னாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமி புஷ்ப பல்லக்கில் வண்ண விளக்கு வெளிச்சத்தில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மேளதாளத்துடன் பக்தா்கள் ஆடிப்பாடிய படி ஊர்வலமாக வந்தனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று சாமி ஊர்வலம் எடுத்து வந்து மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்