உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம்
உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம் நடந்தது.
திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமாகாளியம்மன் கோவிலில் 10-வது ஆண்டாக சதசண்டி யாகம் 3 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. இரவில் சதசண்டி யாகம் தொடங்கியது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை இரண்டாம் கால சண்டி யாக வேள்வி தொடங்குகிறது. மாலையில் மூன்றாம் கால சரஸ்வதி ஹோமம் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நான்காம் கால சண்டி ஹோமம் 13 அத்தியாய ஹோமங்கள், கோபூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, சர்ப்ப பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. பகல் 1.30 மணியளவில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பகல் 2 மணிக்கு அம்பாள் புறப்பாடு உள்வீதி உலா நடக்கிறது.