சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் அமைச்சரிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-06-09 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தி.மு.க. தெற்கு ஒன்றியப்பகுதியில் 6 ஆயிரத்து 100 புதிய உறுப்பினர் சேர்க்க கட்சி தலைமையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 6ஆயிரத்து 400 புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்து உரிய படிவங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலர் பாலமுருகன் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலர் ராமஜெயம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்