சாத்தான்குளம்அரசு மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-16 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் மற்றும் மாணவ உடற்கல்வி செயலர் தமிழ்மலர் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ வழிகாட்டலில், கணிதவியல் துறைத் தலைவர் ஜமுனா ராணி தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் நிவேதா வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூய இருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகா பால்துரை கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து பேசினார். நிகழ்ச்சியை மாணவர் பேரவைச் செயலாளர் அபிநயா தொகுத்து வழங்கினார். மாணவர் பேரவை இணைத் செயலாளர் சுபாஷினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி பேரவைக் குழுவினர் பேராசியைகள் பூங்கொடி, சண்முக சுந்தரி, நீமா தேவ் பொபீனா, ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்