சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-07-27 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் பாலமுருகன், மாநில பிரசாரக்குழு செயலாளர் ஜெசிபொன்ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். தி.மு.க. தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட மகளிர் அணித் தலைவர் சோமசுந்தரி, அவைத்தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தயாநிதி, பிரதீபா மற்றம் தொண்டரணி, மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்தல், மகளிர் அணியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல், மகளிரணியில் புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் துணை செயலாளர் மற்றும் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து பேச்சி, தெற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மேரி ஜெயசித்ரா மற்றும் மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்