சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கு நேர்காணல்
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தெற்கு தி.மு.க. ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் நியமிக்க தலைமை கழகத்தில் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டிருந்தது. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலர் ஆ. பாலமுருகன் தலைமையில், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலர் ஜெஸிபொன்ராணி நேர்காணல் நடத்தினார்.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கல்யாணி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சோமசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.