சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கணினி அறிவியல் துறை தலைவர் ஏஞ்சலின் நான்சி சோபியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவியர் பேரவையினருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சாத்தான்குளம் கல்விக்கழக தலைவர் ஜோசப், செயலர் ஜெயபிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவர் பேரவை தலைவியாக, வணிக நிர்வாகவியல் துறை மாணவி சவுமியா ஆனந்தி, செயலராக கணிதவியல் துறை மாணவி ராகிஷா ஆகியோர் பதவியேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேரவை பேராசிரியர்கள் ஏஞ்சலின் நான்சி சோபியா, மீனா, புஷ்பராணி, முனைவர் மெல்பா ஆகியோர் செய்திருந்தனர்.