தி.மு.க. மகளிர் அணி சார்பில்100 பெண்களுக்கு சேலைகள்

தென்காசியில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன

Update: 2022-12-31 18:45 GMT

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆலோசனையின் படி, மகளிர் அணி சார்பில், கொடிமரம் பகுதியில் 100 பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரும், முன்னாள் தென்காசி நகர் மன்ற தலைவருமான பானு ஷமீம் தலைமை தாங்கி சேலைகளை வழங்கினார். தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் ஷமீம் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்