மேலத்தானியம் பகுதியில் நாற்று நடவு பணி தொடக்கம்

மேலத்தானியம் பகுதியில் நாற்று நடவு பணி தொடங்கியது.

Update: 2022-10-15 18:16 GMT

காரையூர்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மேலத்தானியம், முள்ளிப்பட்டி, ஒலியமங்கலம், காயம்பட்டி, கீழத்தானியம், கொன்னையம்பட்டி, அரசமலை, நல்லூர் ஆகிய பகுதிகளில் கிணறு, ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் தற்போது பெய்துள்ள மழையினை பயன்படுத்தி நாற்று நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தப் பகுதிகளில் சரிவர மழை பெய்யாததனால் கண்மாய் பகுதிகளில் தண்ணீர் சிறிது அளவே உள்ளதால் கிணறு, ஆழ்குழாய் கிணறு இல்லாத விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் மழையினை எதிர்பார்த்து இருக்கினறனர். 

Tags:    

மேலும் செய்திகள்