மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Update: 2022-11-26 18:45 GMT

நாகை மாவட்டம் காமேஸ்வரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் காமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 70-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாநில மகளிர் பாசறை செயலாளர் அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதித்தன், தொகுதி பொருளாளர் நாகராஜன், மாவட்ட குருதிக்கொடை பாசறை செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்