காரிமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காரிமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-09 16:55 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சுகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மனோகரன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுரி திருக்குமரன், நந்தினி ஈஸ்வரன், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்