சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபால் அறிவுரையின்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரிவலம்வந்தநல்லூர், மேலநீலிதநல்லூர், தெற்கு சங்கரன்கோவில், மலையாங்குளம், வடக்கு புதூர் ஆகிய பஞ்சாயத்துகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள் மாரீஸ், பரமசிவன் பொன்னம்மாள், வனச்சரக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உள்ட பலர் கலந்து கொண்டனர்.