அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஆம்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஆசிரியர் ரஜினி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரம் நடுதலின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஆசிரியர் வில்வநாதன் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.