பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பொள்ளாச்சி அருகே பி.நாகூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. இதையொட்டி இணைவோம், மகிழ்வோம் காகித பறவைகள் செயல்பாடுகள் நடைபெற்றது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன், சக மாணவர்கள் ஒருங்கிணைந்து மரம் நடுதல், பலூன் ஊதுதல், பட்டம் செய்து பறக்கவிடுதல், காகித பறவைகள் செய்தல், கை அச்சினை கொண்டு வண்ணங்கள் பூசி பதித்தல், இலையில் விலங்குகளின் வடிவங்களை அமைத்தல், பிரமிடு செய்தல், சாகச வளையம் அமைத்து விளையாடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பூங்கொத்து கொடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் ஆசிரிய பயிற்றுனர்கள் ஸ்வப்னா, சத்தியமூர்த்தி, ரஞ்சித்குமார், சிறப்பு ஆசிரியர்கள் சக்திவேல், ரூபி ஜெபா, லதா, ஜெபாலை, இயன்முறை மருத்துவர் அனிதா, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.
இதேபோல 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்ச்சி ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் காகித பறவை கை அர்ச்சினை வண்ணங்கள் பூசி பதித்தல் பலூன் பறக்க விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் (சின்னப்பராஜ்),வட்டார மேற்பார்வையாளர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.