மரக்கன்றுகள் நடும் விழா
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் நகர் பூங்கா, இருளர் காலனி பூங்கா ஆகிய பகுதிகளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இவ்விழாவில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.