மரக்கன்று நடும் விழா

தூத்துக்குடி பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-10-31 18:45 GMT

தூத்துக்குடி தூய இன்னாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேசுஅந்தோணி தலைமை தாங்கினார். பசுமைப்படை பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றை நட்டினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மரத்தை பாதுகாப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுகவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்