மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சண்முகார்ச்சனை
மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் சண்முகார்ச்சனை நடைபெற்றது
வடவள்ளி
கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படை வீடு என முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப் பட்டது பின்னர் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
அதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அதன்பிறகு மண்டபத்தில் காலையிலும் மாலையிலும் சண்முகார்ச்சனை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்து தங்கள் விரதத்தை தொடர்ந்தனர்.