இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி அபிஷேகம்

ராசிபுரத்தில் இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி அபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-10 19:30 GMT

ராசிபுரம்:-

ராசிபுரம் கடைவீதியில் இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இரட்டை பிள்ளையாருக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சீயக்காய், மஞ்சள், திருமஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், தேன், கரும்பு சாறு, ஆரஞ்சு சாறு உள்ளிட்ட 15 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரட்டை பிள்ளையாருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பூஜையில் ராசிபுரம் மட்டுமல்லாமல் ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்து இரட்டை பிள்ளையாரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்