கெட்டிசமுத்திரம் பகுதியில்பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் சுகாதார பணியாளர்கள்

கெட்டிசமுத்திரம் பகுதியில்பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் சுகாதார பணியாளர்கள்

Update: 2023-08-06 21:49 GMT

அந்தியூர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசமுத்திரம் ஊராட்சி பகுதியில் சாக்கடை வடிகாலை சுத்தப்படுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணமின்றி சாக்கடையில் இறங்கி கழிவுகளை அள்ளி வெளியே போடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுகாதார பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்