தூய்மை பணியாளர்கள் முற்றுகை

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-23 20:56 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நேற்று மாலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'நெல்லை மாநகராட்சியில் 740-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுயஉதவிக்குழு மூலமும், ஒப்பந்ததாரர் மூலமாக 238 பேரும் தூய்மை பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் தினமும் காலையில் மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களுக்கு சென்று வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பயோமெட்ரிக் பதிவு செய்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் திடீரென இன்று (சனிக்கிழமை) முதல் வார்டு வாரியாக செல்போன் செயலி மூலம் வருகை பதிவு செய்வது என்று முடிவு செய்திருப்பதாக அறிகிறோம். மேலும் தூய்மை தொழிலாளர்கள் யாரும் மண்டல அலுவலகம், அலகு அலுவலத்திற்கு வர வேண்டாம், அவர்கள் பயன்படுத்துகின்ற வாகனங்களை வார்டுகளிலே நிறுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளனர். இது தூய்மை பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தூய்மை பணியாளர்களை அலகு அலுவலகம், மண்டல அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்