தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-12 19:35 GMT

தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் பிரகாஷ் தலைமை தாங்கினார். தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர் ஆனந்தராஜ், இணைசெயலாளர் முனியம்மாள், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி தொகுப்பூதியத்தில் பணியமர்த்தவும், தினக்கூலியை ரூ.550-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தேவா, அ.ம.மு.க. மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன், கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் பிரேம்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்துக்குமரன், மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வீரன்வெற்றிவேந்தன், ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஆதிதமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சிவா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்