மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-07 21:37 GMT

மேட்டூர்:

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்க நிர்வாகிகள் கருப்பண்ணன், இளங்கோ உள்பட தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்