ஆரணி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை சேவை பணி
ஆரணி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை சேவை பணி நடந்தது.
ஆரணி
ஆரணி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை சேவை பணி நடந்தது.
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி வேண்டுகோளின்படி தூய்மை சேவை பணி மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தலைமையில் நடைபெற்றது.
சார்பு நீதிபதி ஏ.தாவுத் அம்மாள், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு வக்கீலும், வக்கீல் சங்க தலைவருமான கே. ராஜமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். தூய்மை சேவைப் பணியில் நீதிமன்ற அலுவலர்கள் ஊழியர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், வக்கீல்கள் இணைந்து நீதிமன்ற வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணி மேற்கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார்.