ரெயில்வே பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடு
ரெயில்வே பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா அருகே ரெயில்வே தரைப்பாலத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. இந்தத் தரைப்பாலத்தில் மழைநீர் நீண்ட காலமாக குளம் போல் தேங்கி உள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி விட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.