கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
விருதுநகர் நகராட்சி 27-வது வார்டில் உள்ள சாமியண்ணன் பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் மண்மேவி கழிவு நீர் வெளியேறி சாலைகளில் ஓடும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கீழக்கடை தெருவில் இருந்து நாராயண மடம் தெரு வரை கழிவு நீர்கால்வாயினை எந்திரம் மூலம் தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.