நாகை கடற்கரையில் சங்கமம் விழா

பொங்கல் பண்டிகையையொட்டி நாகை கடற்கரையில் சங்கமம் விழாவில் கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

Update: 2023-01-18 18:45 GMT

நாகை புதிய கடற்கரையில் பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை சங்கமம் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பேச்சாளர் சுகிசிவம் தலைமையில் இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற தலைப்பில் சிந்தனை நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சண்முக வடிவேல், மலர்விழி, மோகன சுந்தரம் ஆகியோர் கொண்டாட்டமே என்ற தலைப்பிலும், சாந்தாமணி, வைஜெயந்திராஜன், பர்வீன் சுல்தானா ஆகியோர் திண்டாட்டமே என்ற தலைப்பிலும் பேசினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்