நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சித்திவிநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் உள்ள விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.