சங்கடஹர சதுர்த்தி தேர்த்திருவிழா

குடியாத்தத்தில் சங்கடஹர சதுர்த்தி தேர்த்திருவிழா நடைபெற்றது.

Update: 2023-09-04 17:31 GMT

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை சித்தி விநாயகர் கோவிலில் சங்கட சதுர்த்தி கமிட்டி சார்பில், மகா சங்கடஹர சதுர்த்தி தேர் புதிதாக செய்யப்பட்டது. இந்த தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத்தலைவர் எம்.பூங்கொடிமூர்த்தி, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகரமன்ற உறுப்பினர் ஏ.சிட்டிபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கடஹர சதுர்த்தி கமிட்டியின் தலைவர் எஸ்.பி.தேவபாலன், துணைத் தலைவர் ஆர்.ரமேஷ், செயலாளர் எச்.செல்வராஜ், துணை செயலாளர் பி.கார்த்தி, பொருளாளர் ஆர்.முரளி, துணை பொருளாளர் ஆர்.கோபி, இளைஞரணி தலைவர் எஸ்.பி.சுரேந்தர், இளைஞர் அணி பொறுப்பாளர் எஸ்.மாதேஷ் உள்பட விழா குழுவினர், அப்பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்