செல்லாண்டியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்
கள்ளிமந்தையம் அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது.
கள்ளிமந்தையம் அருகே உள்ள பூசாரிக்கவுண்டன்வலசு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மழை வளம், விவசாயம் செழிக்கவும் மற்றும் தொழில் வளர்ச்சி அடைய வேண்டியும் நேற்று சிறப்பு யாகபூஜை நடந்தது.
இதனைத்தொடர்ந்து விநாயகர், செல்லாண்டியம்மன், கருப்பண்ணசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பிறகு கோவில் முன் பிரகாரத்தில் சூலாயுதம் வடிவில் 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து, சாமிகளுக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.