சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நான்காவது வாரம் திங்கள்கிழமை சோமவாரத்தில் உலக நன்மை வேண்டியும் கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் 108 சங்காபிஷேக விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கார்த்திகை மாதம் நான்காம் வாரம் திங்கட்கிழமை சோமவாரம் விழா இந்தாண்டும் நடைபெற்றது. கோவில் குருக்கள் ரவி தலைமையில் கங்கா தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதற்காக சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்று 108 சங்குகளில் இருந்த புனித தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சங்குகளில் உள்ள புனித நீர் சிவபெருமானுக்கு ஊற்றப்பட்டு மகாதீபாரானை காட்டப்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.