அய்யப்பன் கோவிலில் சங்காபிஷேக விழா

அய்யப்பன் கோவிலில் சங்காபிஷேக விழா நடந்தது.

Update: 2022-12-09 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. 1008 சங்குகளை கொண்டு கோவில் பிரகாரத்தில் ஓம் காரம் கொண்ட ஓம், சங்கு, சூலம், சிவலிங்கம், சக்கரம் போன்ற வடிவில் சங்குகளை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து திருமறை, தேவதா அனுஷ்கா விக்னேஸ்வரா பூஜை, நவகிரக பூஜை, சகஸ்ர சங்க பூஜை நடந்தது. யாக வேள்வியை சிங்கம்புணரி சேவுக அய்யனார் கோவில் வம்சாவளி சிவாச்சாரியார்கள் அருணகிரி சிவாச்சாரியார் மற்றும் சேவற்கொடியோன் சிவாச்சாரியார் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் செய்தனர்.

பின்னர் அய்யப்பன் கோவில் நுழைவுவாயிலில் உள்ள 18 படிகளில் வலம்புரி சங்குகள் ஒவ்வொரு படிக்கும் ஒரு சங்கு வீதம் 18 சங்குகள் வைத்து சிறப்பு படி பூஜை நடைபெற்றது. ேமலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்்த திரளான பக்தர்கள் கலந்து கொண்்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்