விக்கிரமசிங்கபுரத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
விக்கிரமசிங்கபுரத்தில் மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்று உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பசுக்கிடைவிளை பகுதியில் சின்னத்தம்பி கோவிலுக்கு பின்புறம் மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வேல் (வயது 65) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நின்ற சந்தன மரத்தை மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.