பண்ருட்டி பெரிய தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

உரூஸ் பண்டிகையையொட்டி பண்ருட்டி பெரிய தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-29 18:47 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி காந்தி ரோட்டில் பெரிய தர்கா என அழைக்கப்படும் ஹஜ்ரத் நூர் முகமது ஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவில் கந்தூரி உரூஸ் பண்டிகை கடந்த 23-ந் தேதி கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி இரவு உருது கவாலி போட்டி கச்சேரி, உருது இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

இதையொட்டி இரவு 12 மணி அளவில் ஜாய்ஷைனால் சந்தன கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு மின் விளக்கு அலங்காரங்களுடன் வாணவேடிக்கை மற்றும் மேள-தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து விளக்கு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக தர்கா வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் முஸ்லிம்களுடன் ஏராளமான இந்துக்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளக்கேற்றி வைத்து வழிபட்டது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

நாளை(புதன்கிழமை) விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் அன்சர் பாஷா, நிர்வாக குழு உறுப்பினர்கள் முகமது காசிம், ஏ.ஜாகிர் உசேன், எம்.ஏ.சித்திக் பாஷா, ஏ.ஜுபைர் அலி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்