சந்தனக்கூடு ஊர்வலம்
குடவாசல் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்தைச் சேர்ந்த சேங்காலிபுரம் சாலையில் அமைந்துள்ள சையது அகமது ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நடந்தது.விழாவுக்கு குடவாசல் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலம் அகர ஓகை, பஸ் நிலையம் பள்ளிவாசல் வழியாக சென்று தர்காவை அடைந்தது. இதில் அடவங்குடி, அபிவிருத்தீஸ்வரம், திருவிடச்சேரி, எரவாஞ்சேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குடவாசல் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.