காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

Update: 2022-11-10 19:09 GMT

திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பு துவா தினமும் நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்ட 356-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது. சந்தனக்கூடு விழா நடைபெறுவதையொட்டி பள்ளிவாசலில் இருந்து போர்வை பெட்டி நல்லூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்துக்கள் போர்வை பெட்டிக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் நடத்தி முஸ்லிம்களுக்கு விருந்து வைத்தனர். பின்னர் போர்வையை தர்காவிற்கு எடுத்து வந்த முஸ்லிம்கள் பாவா மீது போர்வையை போர்த்திய பின்னர் சந்தனக்கூடு வாணவேடிக்கைகளுடன் தர்காவை வலம் வந்தது. பின்னர் காட்டுபாவாவுக்கு சந்தனம் பூசப்பட்டு சந்தனக்கூடு விழா நிறைவடைந்தது. இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்