நாட்டுமடம் மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2023-05-27 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த கோவிலில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்