குளித்தலை,
குளித்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணலை எடுத்துக்கொண்டு வந்த நபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர் குளித்தலை மீன்காரத் தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 50) என்பதும் அவர் காவிரி ஆற்றில் இருந்து மணலை சாக்கு மூட்டைகளில் கட்டி திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டன.