மணல் கடத்தல் 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் மற்றும் ஆற்காடு ஆகிய கிராமங்களில் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மாட்டுவண்டி உரிமையாளர்கள் பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 46), கண்டாச்சிபுரம் ஏழுமலை(42), புருஷோத்தமன்(36), ராஜி(28), பிரகாஷ்(40), ஆற்காடு கிராமம் விஜய்(18) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.