மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-03 19:42 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கனகசபையின் மகன் தினகரனை(வயது 22) கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்