சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது - கவர்னர் ஆர்.என்.ரவி
மயிலாப்பூரில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார் .
பின்னர் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில்,
" சனாதன தர்மம் குறித்து பேசும்போது அதனை மதத்துடன் ஒப்பிட்டு பேச கூடாது .சனாதன தர்மும் மதமும் வேறு வேறு.மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர்" சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் உள்ளது. என்றார். காந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மீக வழியில் நாடு சிந்திக்க, செயல்பட தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.