கடம்பூர் அருகேகோவிலில் சாமி கும்பிடுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை
கடம்பூர் அருகேகோவிலில் சாமி கும்பிடுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தாசில்தார்தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டது.
கடம்பூர்:
கடம்பூர் அருகேயுள்ள குப்பானாபுரம் கிராமத்தில் பெருமாள் கோவில், அம்மன் கோவில் சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினை தொடர்பாக கயத்தாறு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார்தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், இருதரப்பை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், கோவில் திருவிழாவை இருதரப்பினரும் இணைந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிராமத்தில் நிலவிய பதற்றம் தணிந்தது.