லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா
லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலாநடந்தது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் கடைசிவெள்ளியை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார் சாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தனித்தனி தங்க கேடயத்தில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தாயாரும், வெள்ளி கேடயத்தில் ஆண்டாள் நாச்சியரும் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் மங்கள வாத்தியங்களுடன் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.