திருச்செந்தூர் முருகன் கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-12-11 15:38 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இரவு கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் விருந்தினர் மாளிகை முன்பு திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து கவர்னருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்