திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம்; தூத்துக்குடி வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி...!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

Update: 2023-07-08 04:23 GMT

தூத்துக்குடி,

திருச்செந்தூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தர உள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்