சம்பா நெல் அறுவடை பணி மும்முரம்

நன்னிலம் பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதுதட்டுப்பாடின்றி அறுவடை எந்திரங்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-04 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதுதட்டுப்பாடின்றி அறுவடை எந்திரங்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போக நெல் சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக நெல் சாகுபடி செய்யப்படும். மேலும் கோடை நெல் சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 2-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், சம்பா சாகுபடி பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

சம்பா அறுவடை பணி

பருவ மழை காரணமாக அவ்வப்போது மழை பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு பயிர்களுக்கு பூச்சி மருந்து, உரம் தெளித்து பயிர்களை காப்பாற்றினர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி உள்ளது. நன்னிலம் அருகே செம்பியமழளை பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி நேற்று தொடங்கியது.

முன்னதாக விவசாயிகள், வயலில் வாழைப்பழம், தேங்காய் வைத்து படையல் போட்டு சூரியனை வழிபட்டனர். பின்னர் நெற்பயிர்களை கதிர் அரிவாளால் அறுத்து அறுவடை பணியை தொடங்கினர்.

தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்

இதை தொடர்ந்து எந்திரம் மூலம் அறுவடை பணி மும்முரமாக நடந்தது. அறுவடை பணி தாமதமின்றி நடைபெற அரசு தட்டுப்பாடின்றி குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்