சம்பா பயிர் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு- முதல் அமைச்சர் அறிவிப்பு
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சம்பா மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
2023-2023ல் சம்பா நெற்பயிர் சாகுபடியின் போது, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தினாலும்,, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான வறட்சியால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிதியில் இருந்து 181 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியது.
இந்த நிலையில், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 7 லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் மூலமாக தெரிவித்து உள்ளார்.
சம்பா மகசூல் பாதிப்புக்கு அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தர ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகையின் அடிப்படையில் சுமார் 6 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.