சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது.

Update: 2023-04-09 19:10 GMT

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது.

பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. நேற்று பங்குனி கடைசிவார ஞாயிற்றுக்கிழமையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

மேலும் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவுபெற்றது.

பச்சைபட்டினி விரதம் நிறைவு

இந்நிலையில், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித குற்ற சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கவும், பூச்சொரிதல் விழா மற்றும் தேர்த்திருவிழா அமைதியாக நடைபெறவும் வேண்டி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி, பிரியாபானு மற்றும் பாலா, தமிழரசன் உள்ளிட்ட போலீசார் மாலை அணிந்து, கையில் காப்பு கட்டி 28 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட போலீசார் தாங்கள் அணிந்திருந்த மாலையை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்