வாய்க்காலில் பிணமாக கிடந்த உப்பு வியாபாரி
முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் உப்பு வியாபாரி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் உப்பு வியாபாரி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பு வியாபாரி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் பகுதியில் முத்துப்பேட்டை - வேதாரண்யம் சாலையோரம் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் நேற்று காலை காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அறிந்த முத்துப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தை சேர்ந்த உப்பு வியாபாரி பெருமாள் (வயது50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? வாகனம் ஏதாவது மோதி இறந்தாரா? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருமாளுக்கு ராணி என்ற மனைவியும், இரு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். வாய்க்காலில் உப்பு வியாபாரி பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.