சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூர் முதுநகரில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-16 18:45 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் பச்சசையாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 40). சலூன் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அமுதவள்ளி. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்ட அமுதவள்ளி, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. பலமுறை கணவர் அழைத்தும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் மனமுடைந்த ராஜவேல் நேற்று அவருடைய தோட்டத்தில் உள்ள மாமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்