உடுமலையில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் வியாபார மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு
உடுமலை பகுதியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அவர்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் புதிதாக அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று வழங்கப்பட உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை வியாபார மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
வியாபார மண்டலம்
வெங்கடகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள பழைய நகராட்சிபா பள்ளி வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வியாபார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற்பனை ஒழுங்குமுறை துணை விதிகளின்படி வியாபார மண்டலங்கள் அறிவிக்கப்பட உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலங்கள் அமைக்கப்படும் இடங்களில் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் சதுர அடிக்கான ஆண்டு கட்டணம் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளுக்கு மாத பராமரிப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு நகராட்சியால் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் வியாபாரச் சான்று வழங்கப்பட்ட இடத்துக்கு மாறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வியாபாரச் சான்று நகர வியாபார குழுவால் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உடுமலை நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் உடுமலை நகராட்சி எல்லைப் பகுதிக்குள் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வியாபார சான்றை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வழங்கின